சென்னை, என்னை மீறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார். பிரசாரம் மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமனை ஆதரித்து, அச்சரப்பாக்கத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க.-அ.தி.மு.க. இடைத்தேர்தல் பிரசாரத்தில், முதல்-அமைச்சர் விஜய் உள்பட அனைவரும், தி.மு.க., அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக கூறுகின்றனர். ஆனால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்று சேரவில்லை. நான் வெற்றி பெறவில்லை. ஆனால் மக்கள் எனக்காக தேடி தேடி வாக்களித்தார்கள். காங்கிரசுக்கு, எனக்கு கிடைத்த அளவு கூட ஓட்டு கிடைக்கவில்லை. பா.ஜனதா மனித குல எதிரி. காங்கிரஸ் தமிழ் இனத்தின் வரலாற்று எதிரி. தங்க மோதிரம் இலவச பேருந்து பயண சலுகை கொடுப்பதற்கு முன்னால், பெண்கள் எங்கும் செல்லவில்லையா? இலவச சிலிண்டர் கொடுப்பதற்கு முன்பு, வீட்டில் அடுப்பு எரியவில்லையா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் என அறிவித்துவிட்டு. எதற்காக ஆட்சி வந்த பிறகு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் என்கிறீர்கள்? என்னை மீறி. புதிய தலைமைச்செயலகம் கட்டுவதை எதிர்த்து பட்டினப்பாக்கம் பகுதியில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். என்னை மீறி அதையெல்லாம் கட்ட முடியாது. 8 வழிச்சாலை அமைக்கப் போகிறோம் என்றார்கள். பேனா வைக்கப்போகிறோம் என்றார்கள். அதெல்லாம் செய்யவிட்டேனா? நான் அய்யனார் சாமி மாதிரி காவலுக்கு நிற்பேன். நான் சட்டமன்றத்திற்கு வராத வரை, நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ennai-meeri-pattinappakkathil-pudhiya-thalaimaich-seyalagam-katta-mudiyathu-seeman




