சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சீமான், திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், திரை பிரமுகர்கள் என நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வி.ஐ.பி, வி.வி.ஐ.பி- க்கள் என இந்த நிகழ்வில் குவிந்திருக்கிறார்கள். முதல்வர் விஜய் பங்கேற்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் ரத்தாகியுள்ளது. திரிவேணி குழும திருமண விழா இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த இந்தத் திருமண விழா குறித்து நம்மிடம் பேசிய திரிவேணி குரூப்ஸ் நிர்வாகிகள், "இந்தியாவின் முன்னணி சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு பெருநிறுவனங்களில் ஒன்றாக திரிவேணி குழுமம் இயங்கி வருகிறது. 1991-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய இந்தியாவின் மிக முக்கிய தாது வளம் கொழிக்கும் மாநிலங்களில் உள்ள பெரிய சுரங்கங்களை இந்த நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றிலும் தனது சுரங்கத் தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. இந்தக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பி. பிரபாகரன அவர்களின் மகன் திருமண விழாதான் தற்போது சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மும்பையைச் சேர்ந்த பிரபல இரும்பு மற்றும் தாது உற்பத்தி நிறுவனமான லாயிட்ஸ் மெட்டல்ஸ் அதிபரின் மகளைச் சம்மந்தம் முடித்திருக்கிறார்கள். இந்திய அளவில் அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சேலம் பிருந்தாவன் மைதானத்தில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. தொழிலதிபர்கள் மட்டுமின்றி நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று வருகிறார்கள். ஹெலிபேட் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/salem-thiriveni-groups-wedding




