புதுடெல்லி, அடுத்த மாதம் 19-ந்தேதி ஜப்பானில் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் மொத்தம் 492 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இதில் டென்னிசில் 7 பேர் களம் காணுகிறார்கள். ஆனால் வளரும் நட்சத்திரங்கள் மானஸ் தம்னே, வைஷ்ணவி அட்கர், சஹஜா யமலபள்ளி, வைதேகி சவுத்ரி, பிரார்த்தனா தோம்பரே ஆகிேயாருக்கு இடம் கிடைக்கவில்லை. தரவரிசையில் ஆசிய அளவில் முதல் 8 இடங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே இடம் என்ற மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளால் இவர்களது வாய்ப்பு பறிபோய் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) வட்டாரங்கள் கூறுகையில், 'இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ) மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் பகிர்ந்து கொண்ட இறுதிப்பட்டியலில் இந்த 5 வீரர், வீராங்கனைகள் பெயர் இடம் பெற வில்லை. சொல்லப்போனால், அகில இந்திய டென்னிஸ் சங்கம், ஐ.ஓ.ஏ.க்கு அனுப்பிய பட்டிய லேயே இவர்களது பெயர் இல்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி இவர்களின் சமீ பத்திய செயல்பாடுகள் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பையோ அல்லது ஆசிய விளையாட்டில் சிறப்பாக செயல்படுவதற்கான அறிகுறியையோ வெளிப்படுத்தவில்லை. எனவே அவர்களை தேர்வு செய்யாதது சரியான முடிவு தான்' என்று தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/tennis/why-were-5-players-left-out-of-the-tennis-team-sports-authority-explains




