ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கைப் பதிவு செய்திருக்கிறது சென்னை காவல்துறை. சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனர் வீரமணி மீதான விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இக்கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் சாந்தி, சாந்தியின் கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலதிபர் ஜெம் வீரமணி இவ்வழக்கை விரைவாகவும் நடுநிலையாகவும் விசாரிக்க டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், பி.சி. தேன்மொழி தலைமையில் பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டிருக்கிறது. ஜெம் வீரமணி: 'விஜய், ஆதவ், சி.டி.ஆருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்' - டி.ஆர் பாலு புகார் இந்நிலையில் தனது மகள் வீரமணியால் பாலியல் துன்புறுதலுக்கு உள்ளானதாக பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வழக்கு ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரமணி மீது, தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெம் வீரமணி வழக்கு – மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு – பொது மக்கள் தகவல் அளிக்க வேண்டுகோள் ஜெம் வீரமணி வழக்குகள் தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் இவ்வழக்கிற்கு தொடர்புடைய தகவல்கள், உண்மைகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய விவரங்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், அவற்றை சம்மந்தப்பட்ட நபர்கள் 9345319676 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ, Whatsapp மூலமாகவோ அத்தகவல்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/complaint-filed-by-minor-girls-mother-another-pocso-case-registered-against-jeyam-veeramani



