விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் பக்தர்களின் உடமைகளை பரிசோதனை செய்த பின்னரே பக்தர்களை மலையேற அனுமதித்தனர். புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/purattasi-full-moon-devotees-flocked-to-the-sathuragiri-sundara-mahalingam-temple




