திருப்பூர், முதல் - அமைச்சர் விஜய்யின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள தொழில் பாதிப்படைவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் வேதனை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் உள்ள குண்டடத்திற்கு இன்று முதல் - அமைச்சர் விஜய் பிரசாரத்திற்காக வருகை தருகிறார். இந்த நிலையில் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் உள்ள கடைகளை மூட சொன்னதால் வியாபாரிகள் சிலர் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் சிலர், “எல்லா கடைகளையும் மூட உத்தரவிட்டால் சோறுக்கு என்ன செய்வது? ஏற்கனவே தண்ணீரும் இல்லை, மழையும் இல்லை தொழிலை நம்பி தான் வாழ்க்கையை நடத்துகிறோம். தற்போது கடைகளை மூட சொன்னால் என்ன செய்வது? சும்மா பார்த்து விட்டு செல்வதற்கு எதற்கு இவ்வளவு பாதுகாப்பு” என கேள்வி எழுப்பி குற்றம்சாட்டியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/orders-to-close-shops-for-prime-minister-vijays-roadshow-traders-in-distress




