சென்னை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மறுசீராய்வு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் இந் திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், 20 ஓவர் அணியின் கேப் டன் ஸ்ரேயாஸ் அய்யர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு மைய இயக்குனர் வி.வி.எஸ்.லட்சு மண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்வி, முன்னணி வீரர்கள் அடிக்கடி காயத்தில் சிக்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா நிருபர்களிடம் கூறியதாவது, நாங்கள் எதிர்கொள்ளும் ஒரே சவால் என்னவென்றால், ஒரு ஆண்டில் அதிகமான போட்டி கள் நடப்பது தான். நிறைய போட்டிகளில் ஆடுவதால் வீரர்களுக்கு காயங்கள் ஏற்படுகின் றன. இவர்களின் போட்டி அட்டவணையை பார்த்தால், உதாரணமாக இங்கிலாந்து ஒரு நாள் தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி சென்றது. அங்கு 3-4 வீரர்கள் ஆட்டத்தின் போது காயமடைந்தனர். ஆனால் அதற்கு முன்பு அவர்கள் 2 மாதங்கள் ஓய்வின்றி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாம் வீரர்க ளின் உடல்நலத்தை பாதிக்கின்றன. இத்தகைய சூழலை தவிர்க்க போட்டிகள் மற்றும் எதிர்கால போட்டி அட்டவணைகளுக்கு உட்பட்டு நாம் என்ன சிறந்த நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கான தீர்வை காண முயற்சிக் கிறோம். மூத்த வீரர் ரோகித் சர்மா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆட்டத்தில் (இங்கி லாந்துக்கு எதிராக) 138 ரன்கள் குவித்தார். அதனால் அவரது எதிர்காலம் குறித்து ஏன் யூகங்களை கிளப்புகிறீர்கள். அந்த யூகங்களுக்கு பதில் அளிக்கப்போவதில்லை. தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கரின் ஒப்பந்த காலத்தை நீட்டிப்பது குறித்து எதுவும் விவா திக்கப்படவில்லை. அவர் வெளியூரில் இருப்பதால் அவரால் கூட்டத்துக்கு வர முடியவில்லை. இவ்வாறு சைக்யா கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/rohit-sharma-is-playing-exceptionally-well-bcci-secretarys-statement




