திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிளியூர் பகுதியில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு அதிரடியாக அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது கிளியூர் பாலத்தில் சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் மணலை ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். போலீஸாரைக் கண்டதும் 4 மாட்டு வண்டிகள் மற்றும் மாடுகளையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மாட்டு வண்டிகள் பின்னர், அவற்றை ஒரு வழியாக திருவெறும்பூர் போலீஸார் தாங்களே வண்டிகளில் மாடுகளை பூட்டி, பிறகு ஓட்டிக்கொண்டு திருவெறும்பூர் காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும், தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவெறும்பூர் பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளை போலீஸார் யூனிஃபார்மில் ஓட்டி வந்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/trichy-sand-theft-policemen-seized-cattle-vehicles




