வயநாடு, கேரளம் மாநிலம் வயநாட்டில் கனமழையால் சுரங்கப்பாதை அமைக்கும் இடத் தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் பலரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கல்லட்டி என்ற இடத்தில் கோழிக்கோடு-வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரஙகப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவு குறித்து திலீப் பில்டுகான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்ப தாவது:- அனைத்து ஒப்புதல்களும் பெற்றுத்தான் சுரங்கப்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட இடம் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்ப தால், சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழு உள்பட பல்வேறு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. அகழாய்வு செய்யப் பட்ட அனைத்து பொருட்களும் விதிமுறைப்படி கையாளப்படு கின்றன. எனவே, தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/technical-glitch-not-the-cause-of-wayanad-landslide-tunnel-corporation




