உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கி என்ற இடத்தில் 15 அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று அங்கிருந்த இறைச்சிக்கடைக்குள் நுழைந்தது. அந்த பாம்பு அங்கு நின்று கொண்டிருந்த ஆடு ஒன்றை கடித்து விழுங்குவதற்காக ஆட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து கடை உரிமையாளர் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியில் வந்து பாம்பை அடிக்க ஆட்களையும், கம்பையும் தேடிக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு சுரேஷ் என்ற நபர் வந்தார். அவர் அதிகப்படியான மது போதையில் இருந்தார். அவர் நான் பாம்பை பிடிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கடைக்குள் நுழைந்தார். இதனை பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். சுரேஷ் நேரடியாக உள்ளே சென்று ஆட்டுக்கு அருகில் இருந்த பாம்பை தனது கையால் பிடித்தார். கழுத்தில் மாலையான பாம்பு அந்த பாம்பை தனது கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டார். அங்கிருந்த அனைவரும் பாம்பை விடும்படி கூறினர். ஆனால் சுரேஷ் கேட்பதாக இல்லை. அதோடு அவர் பிடித்த பாம்பும் அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடியது. அதோடு அந்த பாம்பு சுரேஷை ஓரிருமுறை கடிக்கவும் செய்தது. பாம்பு தன்ன விடுவித்துக்கொள்ள எவ்வளவு போராடினாலும், போதையில் இருந்தவர் மனம் தளராமல் இறுதியாக பாம்பை பிடித்து, அதை ஒரு மாலை போல தோள்களில் சுற்றிக்கொண்டார். பின்னர் அவர் அதோடு விளையாட ஆரம்பித்தார். இந்த வினோத சம்பவத்தைக் காண அங்கு ஒரு பெரிய கூட்டம் கூடியது. அந்த வழியாக சென்றவர்களும், உள்ளூர் கடைக்காரர்களும் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியில் நின்றனர். சிறிது நேரம் மலைப்பாம்புடன் விளையாடிய சுரேஷ், இறுதியாக ஒரு பெரிய பாத்திரம் ஒன்றில் போட்டு அதனை எடுத்துச்சென்று பத்திரமாக அங்குள்ள வாய்க்கால் ஒன்றில் விட்டார். அந்த பாம்பு மலைப்பாம்பு என்பதால் அதற்கு விஷம் இல்லை. இதனால் சுரேஷ் அதன் கடியில் இருந்து தப்பினார். சுரேஷ் பாத்திரத்தில் இருந்து திறந்துவிட்ட பிறகு மலைப்பாம்பு அதன் தலையை காற்றில் சுமார் மூன்று அடி உயர்த்தி பொதுமக்களை அச்சம் அடைய செய்தது. பின்னர் அது அங்கிருந்து தப்பிச்சென்றது. அதன் பிறகுதான் உள்ளூர்வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/intoxicated-man-catches-a-python-that-had-come-hunting-for-a-goat-and-playfully-drapes-it-around-his-neck-like-a-garland




