கரூர், அரசு பள்ளி தலைமை ஆசிரியையை தாக்கியதாக இடைநிலை ஆசிரியை கலைமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் ண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குத் தலைமை ஆசிரியராக புவனா என்பவரும், இடைநிலை ஆசிரியராக கலைமதி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், கலைமதி சரியாக வேலை செய்யவில்லை என, தலைமை ஆசிரியை புவனா அளித்த புகாரால், வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கலைமதி, ஜூலை 30ல் வகுப்பறையில் வைத்து, மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியை புவனாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை, தன் செல்போனில் மற்றொரு ஆசிரியை பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில், கரூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியையை தாக்கியதாக இடைநிலை ஆசிரியை கலைமதியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-attack-on-headmistress-teacher-suspended




