பரமக்குடி, 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தாத்தாவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 73 வயது முதியவர். இவருடைய மகளுக்கு திருமணமாகி கணவர் இறந்து விட்டார். அவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். பாலியல் தொல்லை இந்த சிறுமி பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். முதியவரின் வீட்டின் அருகில் அவரது மகள் மற்றும் பேத்தி வசித்து வருகின்றனர். இதனால் முதியவர் அடிக்கடி தனது மகள் வீட்டுக்கு சென்று பேத்தியை பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் சில மாதங்களாக தனது பேத்தி என்றும் பாராமல் அந்த சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி, தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தனது தந்தையை கண்டித்துள்ளார். இருப்பினும் முதியவர் தொடர்ந்து பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 3 மாத கர்ப்பம் மேலும் தனது பேத்தியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமானதாக தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தனது தந்தை மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/grandfather-arrested-for-impregnating-10th-grade-student




