ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல வழிகளில் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். வேலைக்கு ஆகவில்லை. நெருக்கடியும் கொடுத்துப் பார்த்தார். ரஷ்யாவை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. அமெரிக்காவின் பிளான் இதனால், ரஷ்யாவிற்கு வரும் நிதி ஆதாரத்திற்கு நெருக்கடி கொடுக்க பிளான் போடுகிறது அமெரிக்கா. ரஷ்யா ஏற்கெனவே பல்வேறு நிதித் தடைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்போதும் அதற்கு வருமானம் ‘ஸ்டெடி’யாக வருகிறது என்றால், அது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலம்தான். இதனால், இந்த ஏற்றுமதிகளைத் தடுக்க நினைக்கிறார் ட்ரம்ப். crude oil - கச்சா எண்ணெய்MDR: மளிகைக் கடைகளில் UPI Payment செய்தால்கூட கட்டணமா? கஸ்டமர் தலையில் விழுமா இது? | Explained FAQ சட்டம்! அதாவது, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது ‘இரண்டாம் கட்ட’ வரிகளை விதிக்க சட்டம் கொண்டுவருகிறது அமெரிக்கா. இந்தச் சட்டத்தின் பெயர், ‘ரஷ்யா மீதான தடைகள் சட்டம்’ ஆகும். இந்தச் சட்டம் மூலம் ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமெரிக்காவிற்கு ஏதேனும் பொருளை ஏற்றுமதி செய்தால், அவை மீது 100 சதவீத வரி விதிக்கப்படும். இந்தச் சட்டம் அமெரிக்காவின் மேல்சபைக்குக் கடந்த மாதம் கொண்டுவரப்பட்டது. அதற்கு 86-11 வாக்குகளில் பெரும்பான்மை ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (செப்டம்பர் 16) இறுதி ஒப்புதலுக்குக் கீழ்சபையில் கொண்டுவரப்பட்டது. அங்கே 262-159 வித்தியாசத்தில் பெரும்பான்மை கிடைத்துவிட்டது. ட்ரம்ப் முடிவு? இனி ட்ரம்பின் கையெழுத்திற்காக மட்டும்தான் வெயிட்டிங். ட்ரம்ப் கையெழுத்திட்டுவிட்டால், இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிடும். ட்ரம்ப்பாக்-சீனா எல்லை விவகாரம்: “இரு நாடுகளுக்கும் இடையே எல்லை என்று எதுவும் இல்லை” - இந்தியா உறுதி ட்ரம்ப், இந்தச் சட்டத்திற்குக் கையெழுத்திட்டு விடுவார். இது குறித்து முன்னரே அவர் தெரிவித்துவிட்டார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதிகளை அதிகம் செய்யும் டாப் நாடுகள் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான். இதுவரை அமெரிக்கா, நாடுகளின் பெயர்களைப் பட்டியலிடவில்லை. இருந்தாலும், இந்தச் சட்டத்தில் மேலே குறிப்பிட்ட நாடுகள்தாம் பாதிக்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/us-house-passes-russia-sanctions-bill-with-100-tariff-power




