டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர் அருகே உள்ள கார்பெட் வனப்பகுதியில், கோசி ஆற்றின் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தனது ஒரு மாத குட்டியை, தாய் யானை ஒன்று உயிரைப் பணயம் வைத்து போராடி மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. காட்டாற்று வெள்ளம் ராம்நகர் வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கோசி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், யானைகள் கூட்டம் ஒன்று ஆற்றை கடக்க முயன்றது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு மாதமே ஆன குட்டி யானை ஒன்று, ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் நிலைதடுமாறி அடித்து செல்லப்பட்டது. தாய் யானையின் பாசம் தன் கண் முன்னே குட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை கண்ட தாய் யானை,காட்டாற்று வெள்ளத்தின் வேகத்தையும் பொருட்படுத்தாமல், தண்ணீரை எதிர்த்து போராடி நீந்தி சென்றது. சுமார் சில நிமிட போராட்டத்திற்கு பிறகு, தனது தும்பிக்கை மற்றும் கால்களின் துணையோடு குட்டி யானையை பத்திரமாக பிடித்து, ஆற்றின் பாதுகாப்பான கரை பகுதிக்கு தள்ளி சேர்த்தது. தாய் யானையின் இந்த பாச போராட்டத்தை கண்ட அங்கிருந்த வனவிலங்கு ஆர்வலர்கள், அதனை தங்களது மொபைல் போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/uttarakhand-mother-elephant-saves-calf-from-kosi-river



