சென்னை, தங்கம் விலை தங்கம் விலை கடந்த 5-ந்தேதியில் இருந்து 'டாப்' கியரில் எகிறி வருகிறது. அன்றைய தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்திருந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய விலை நிலவரம் இந்த நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ,2,60,000க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-surgedwhat-is-the-situation-today




