சென்னை, தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பது, வேளாண் விளைபொருட்கள் மற்றும் அவை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பணிகளை, டி.என்.எபெக்ஸ் எனப்படும், தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் செய்து வருகிறது. மேலும், தமிழகத்தின் தனித்துவமான, பாரம்பரியமிக்க பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரும் பணியையும் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட புவியியல் அமைப்பு, ஒரு பகுதி, நகரம் போன்றவற்றுடன் தொடர்புடைய பாரம்பரிய தயாரிப்புக்கு, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதற்கு, இந்திய அறிவு அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தற்போது, திண்டுக்கல் மாவட்டம் - கொடைக்கானல் பன்றிமலை காபி, கடலுார் - காராமணிக்குப்பம் கருவாடு, தஞ்சை - கும்பகோணம் டிகிரி காபி, நீலகிரி நெய், மதுரை- பாலமேடு பால்கோவா ஆகிய ஐந்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக, டி.என்.எபெக்ஸ் நிறுவனம், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் வாயிலாக விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே, செட்டிநாடு கைமுறுக்கு மற்றும் சீடை, ராமநாதபுரம் பனை கருப்பட்டி, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டரை கருவாடு போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களுக்கு, வெளிநாடுகளில் தேவை அதிகரிக்கும். இது, ஏற்றுமதி அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. எனவே, தமிழகத்தில் தனித்துவமான பாரம்பரியமிக்க பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பெறுவதன் வாயிலாக, அவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும். இதனால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-applies-for-geographical-indication-gi-tags-for-five-food-products-including-kumbakonam-degree-coffee




