புதுடெல்லி, ஓணம் பண்டிகைக்கு 100 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இது தொடர்பாக, பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:- கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்டு 16 முதல் 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகை மற்றும் சுற்றுலா சார்ந்த நிகழ்வுகள் மாதம் முழுவதும் தொடரும் என்பதால், பயணிகளின் கூடுதல் தேவையை சமாளிக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு ரெயில்கள் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி, 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட அதிகம் ஆகும். பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் சுகமான பயணத்தை வழங்குவதற்கு ரெயில்வே அமைச்சகத்தின் நிலைப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது கேரளாவில் ரெயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/100-special-trains-for-onam-festival-union-minister-ashwini-vaishnav-informed




