ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாரம்பர்ய காங்கேயம் நாட்டு மாடுகள் அழகுப் போட்டிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நிகழச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " தமிழகத்தில் நல்லதொருா ஆட்சி மலர்ந்திருக்கிறது. வரவிருக்கும் காலங்கள் பொற்காலமாக அமையும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு டெல்டா விவசாயிகளை வாழ வைக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட அங்கே வைக்க தமிழக அரசு அனுமதிக்காது. அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தின் உரிமைகள் என்றும் நிலைநாட்டப்படும். வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களும் நிலை நாட்டப்படும். முதலமைச்சர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும், என்பதால்தான் அவர் அமைதியாக இருக்கிறார். மற்றபடி வேறு எதுவும் இல்லை. காவிரி நீர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தான் செயல்பட்டு வருகிறோம். அதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/governance/minister-sengottaiyan-erode-press-meet-update



