சென்னை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகனை கிண்டல் செய்யும் வகையில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபி, சுதாகர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் உருக்கமாக பேசிய வீடியோவை நகைச்சுவை வடிவில் மாற்றி வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது இந்த விவகாரம் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா, "வேதனையில் இருந்த ஒரு சிறுவனை கேலி செய்வது ஏற்க முடியாதது. திறமையான கலைஞர்களாக அறியப்படும் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது" என்று தனது சமூக வலைதள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் சிறுவனின் உணர்வுகளை நகைச்சுவைக்காக பயன்படுத்தியதை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். யாரையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல இந்த நிலையில், பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் அதற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில், சமீபத்தில் எங்களது சேனலில் வெளியான "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி, சமூக வலைதளங்களில் சிலரின் மனதை புண்படுத்தியதாக அறிகிறோம். அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும், அது சிலரின் மனதை காயப்படுத்தியிருப்பதால், அந்தக் காட்சிகளை வீடியோவிலிருந்து நீக்கியுள்ளோம். பரிதாபங்களின் நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல. என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/backlash-over-imitating-an-mlas-son-parithabangal-team-removes-controversial-scene




