சென்னை, ஆகஸ்ட் 3ல் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கர்நாடகா செல்வதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக, முதல்-அமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் நாம் வலியுறுத்தி இருப்பதை இந்தப் பயணம் நீர்த்து போகச் செய்யாதா? மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் திமுகதான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். மாநிலத்தின் முக்கியப் பிரச்னையில் யார் குரலையும் கேட்காமல் Indifferent ஆகவும், Inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேகதாது விவகாரத்தில் தமிழக மக்கள் நலன் பாதிக்கப்பட அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என தவெக கூறியுள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே? தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முமுதல்-அமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல. ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே. யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது. மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என அதில் பதிவிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-will-never-allow-tamil-nadus-interests-to-be-harmed-tvk




