சென்னை, அக்டோபர் 2-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்போம் என்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிராம சபையில் பங்கேற்போம்! நமது தலைவர் கமல் ஹாசன் உள்ளாட்சிகளின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதை கவனத்தில் கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் கிராமசபைக் கூட்டங்கள் நடக்கும்போதும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளான நாம் அவரவர் பகுதிகளில் நடக்கும் கிராமசபைக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறோம். காந்தி ஜெயந்தி வருகிற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று (02.10.2026) தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், நமது கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் வழக்கம்போல் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நமது கடமை மேலும் நம்முடன், கிராம பொதுமக்களையும் கூட்டத்தில் பங்கேற்க செய்து பங்கேற்பு ஜனநாயகத்தினை வலுப்படுத்திட வேண்டும். கூட்டத்தில், கிராம மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளானது கிராமசபை தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவதற்கு துணைநிற்க வேண்டியது நமது கடமையாகும். துணைநிற்போம் மேலும், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கும் நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தலைவர் நமக்கு வகுத்தளித்துள்ள இந்த அணுகுமுறையில் நாம் அனைவரும் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று மக்களின் அடிப்படை தேவைகள், பிரச்னைகளை தீர்ப்பதற்கு துணைநிற்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-participate-in-grama-sabha-meetings-in-tamil-nadu-on-october-2-people-justice-center




