சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்திருந்தது. அறநிலையத்துறையின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் பேசும் முன்பே '106 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிடவிருக்கிறார்' என முன்னாள் அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் அறிவிக்கும் முன்பு திமுக முகாமுக்கு தகவல் எப்படி கசிகிறது என அமைச்சர் ரமேஷ் உட்பட ஒட்டுமொத்த தவெக முகாமும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. சேகர் பாபு அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையின் மீதான தீர்மானங்களை அமைச்சர் ரமேஷ் நேற்று அவையில் முன்வைத்திருந்தார். மானியக் கோரிக்கை மீது திமுகவின் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசியிருந்தார். அப்போது திமுக அறநிலையத்துறைக்காக செய்த திட்டங்களை பட்டியலிட்டு விட்டு தவெக அரசையும் விமர்சித்து பேசியிருந்தார். பேச்சை முடிக்கையில், 'இன்றைக்கு 106 அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறீர்கள். அதில் எத்தனை அறிவிப்புகளை செய்கிறீர்கள் என பார்ப்போம்' என்று முடித்தார். மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏக்களெல்லாம் பேசி முடித்த பிறகுதான் அமைச்சர் பதிலுரை வழங்குவார். அந்த பதிலுரையில்தான் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவார். அப்படி அமைச்சர் அறிவிப்புகளை சொல்லும் முன்பே '106 அறிவிப்புகள்' என சேகர் பாபு குறிப்பிட்டு பேசியிருந்தார். இதை சபாநாயகரும் கவனித்திருந்தார். அமைச்சர் ரமேஷ் எல்லா உறுப்பினர்களும் பேசி முடித்த பிறகு அமைச்சர் ரமேஷ் பதிலுரையை தொடங்கினார். அப்போது இடையில் பேசிய சபாநாயகர், 'அமைச்சர் அறிவிக்கும் முன்பு காலையிலேயே சேகர் பாபு எப்படி '106' அறிவிப்புகள் என சரியாக சொன்னார் என்று சிந்தித்து பார்க்கிறேன்' என்றார். '106 அறிவிப்புகள் என புலனாய்வு செய்து கண்டுபிடித்த சேகர் பாபு அவர் கேட்ட கல்லூரி விஷயமும் அறிவிப்பில் இருக்கிறது என்பதை அறியவில்லை போல.' என அமைச்சர் ரமேஷூம் பதில் கூறினார். ஆனால், அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடும் முன்பே அது எதிர்க்கட்சியின் முக்கியஸ்தருக்கு கசிகிறது என்பதையும் அதை அந்த உறுப்பினர் அவையிலேயே போட்டுடைத்து மூக்குடைக்கிறார் என்பதையும் அமைச்சர் ரமேஷ் உட்பட ஒட்டுமொத்த தவெக முகாமுமே சீரியஸாகவே பார்க்கிறது என்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர். திமுக ஆட்சியில் சேகர் பாபுவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த இப்போது முக்கியமான இரண்டு துறைகளை கையில் வைத்திருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மீதுதான் அமைச்சர் தரப்பின் சந்தேகப் பார்வை நீள்வதாகவும் கிசுகிசுக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/shekar-babu-announces-it-before-the-minister-spy-officials-tvk-ministers-in-a-fix




