துபாய், பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா புதிய வரலாறு படைத்துள்ளார். அபார வெற்றி 8 அணிகள் பங்கேற்கும் 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிக ரன்கள் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தார். 14 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் உள்பட 124 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர்) மந்தனாவின் ரன் எண்ணிக்கை 10,880-ஆக உயர்ந்தது. இதன் மூலம் பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இதற்கு முன்பு இந்த சாதனை இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் வசம் இருந்தது. அவர் 10,868 ரன்கள் குவித்திருந்தார். தற்போது மந்தனா, மிதாலி ராஜை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்தின் முன்னாள் வீராங்கனை சுசி பேட்ஸ் 10,740 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். அதிக சதங்கள் மேலும், இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம் மந்தனாவின் சர்வதேச சதங்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது. இதில் ஒருநாள் போட்டியில் 14 சதங்களும், டெஸ்ட் போட்டியில் 2 சதங்களும், 20 ஓவர் போட்டியில் 2 சதங்களும் அடங்கும். இதன்மூலம் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா தன்வசப்படுத்தினார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் ஆகியோர் தலா 17 சதங்களுடன் மந்தனாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். தற்போது இருவரையும் பின்னுக்குத் தள்ளி மந்தனா முதலிடத்தை பிடித்துள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் இதுமட்டுமின்றி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன்பு ஹர்மன்பிரீத் கவுர் 89 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருந்தார். ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 7 சிக்சர்கள் விளாசியதன் மூலம் மந்தனாவின் சர்வதேச 20 ஓவர் சிக்சர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்தது. இதன்மூலம் ஹர்மன்பிரீத் கவுரை பின்னுக்குத் தள்ளி மந்தனா புதிய சாதனை படைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/three-records-in-a-single-match-mandhana-creates-history-in-womens-cricket




