துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் - இந்தோனேசியா இந்நிலையில், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகள் மோதுகின்றன. டாஸ் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தோனேசியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-cricket-uae-opt-to-bowl




