சென்னை, தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற 79,403 மாணவ-மாணவிகளுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் 28,979 பேருக்கு இடம் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற்றது. முதல் சுற்றில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 26,802 மாணவ-மாணவிகளுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 2,177 மாணவ-மாணவிகளுக்கும் என மொத்தம் 28,979 பேருக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2-ம் சுற்று கலந்தாய்வு இதைத்தொடர்ந்து பொறியியல் 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் 93,117 மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அழைக்கப்பட்ட மாணவர்கள் கடந்த 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்தனர். இதையடுத்து, அவர்கள் தேர்வு செய்த விருப்பங்களின் அடிப்படையில் தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 79,403 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு 2-ம் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 68,388 மாணவர்களுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 11,015 மாணவர்களுக்கும் என மொத்தம் 79,403 மாணவ-மாணவிகளுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று மாலை 5 மணி வரை அவகாசம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இட ஒதுக்கீட்டை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக இன்று மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இறுதி இட ஒதுக்கீடு ஆணை நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-second-round-counseling-provisional-allotment-orders-for-79403-students




