பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அரசுப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் பணி முடிந்து பில் தொகை பெறுவதற்கு கமிஷன் வழங்க வேண்டுமென பேப்பரில் எழுதி காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. pdo அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உண்மைத்தன்மை கண்டறிய பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வலுத்த நிலையில் இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த் கமிஷன் கேட்பதும் சிலரிடம் தொகைகள் பெற்றதும் உறுதியானதைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சரண்யா அறி உத்தரவிட்டுள்ளார். கமிஷன் கேட்ட பி.டி.ஓ-வை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம், பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/perambalur-video-of-pdo-demanding-a-commission-goes-viral-collector-suspends-official




