சென்னை, வனம், வன விலங்கு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச், "ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை ஊர்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவேண்டும். இந்த ஊர்களில் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வினியோகம் செய்வதற்கு பதிலாக மாற்று வழியை தேர்வு செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், "ஆவின் பால் வினியோகத்துக்கு மீண்டும் தானியங்கி விற்பனை எந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். சோதனை அடிப்படையில் கொடைக்கானல், ஊட்டி நகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த பகுதிகளில் இந்த எந்திரங்களை அமைக்கவுள்ளோம். இதற்காக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒரு எந்திரம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் இரண்டு எந்திரங்களை வாங்கி உள்ளோம். இந்த எந்திரங்களை வைத்த பிறகு, அருகில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு பாக்கெட்டுகளில் பால் வினியோகிக்கக்கூடாது என மொத்த விற்பனையாளர்கள், ஏஜெண்டுகள். வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்படும். எந்திரங்களை அமைத்த பிறகு ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பனை நிறுத்தப்படும்"என்று கூறப்பட்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-supply-in-plastic-packets-to-be-stopped-aavin-company-tells-high-court




