புதுடெல்லி டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு ராஷ்டிரபதி பவன் மியூசியம் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 11 முதல் 13 வரையிலான 3 நாட்களுக்கு 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 3 நாட்கள் இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், ராஷ்டிரபதி பவன் மியூசியம் மற்றும் அம்ரித் உத்யன் ஆகிய பகுதிகள் நாளை முதல் 3 நாட்களுக்கு (11 முதல் 13 வரை) மூடப்பட்டு இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் பார்வையிட 3 நாட்களுக்கு அனுமதி கிடையாது. இதேபோன்று ராஷ்டிரபதி பவனில், ராணுவ வழக்கப்படி வாரந்தோறும் சனிக்கிழமை காலை நடைபெற கூடிய, ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பொறுப்பு மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியும் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடைபெறாது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/brics-summit-rashtrapati-bhavan-museum-closed-for-3-days




