சென்னை தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 23 மாவட்டங்கள் இந்த நிலையில், தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மித முதல் லேசான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல். புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்கள் மற்றும் கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைத்தொடர் பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-7-pm-in-23-districts




