வெளிநாட்டில் சம்பாதிக்கும் வரை கொண்டாட்டம். ஆனால், ரிட்டயர்மென்ட்டுக்கு அப்புறம்? நீங்க நிம்மதியான ஓய்வுக்காலத்தை அனுபவிக்க இந்த 10 'கோல்டன் ஃபார்முலா'க்களை ஃபாலோ பண்ணாலே போதும். ரூபாயின் மதிப்பை கணக்கிடுங்கள்: நீங்கள் சம்பாதிப்பது டாலரோ அல்லது தின்ஹாமோ இருக்கலாம். ஆனால் செலவழிக்கப் போவது இந்திய ரூபாயில். பணவீக்கத்தையும் (Inflation) சேர்த்து கணக்கிட்டு இலக்கை நிர்ணயிப்பதுதான் முதல் விதி. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (Equity Mutual Funds): வெறும் பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட்டை நம்பியிருக்காதீர்கள். நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தை வீழ்த்தி நல்ல கார்ப்பஸ் சேர்க்க Equity Mutual Funds (SIP) மிகச்சிறந்த சாய்ஸ். உங்கள் பணத்தில் 30-50% இதில் இருப்பது நல்லது. Hybrid & Debt Funds சேர்க்கை: ரிட்டயர்மென்ட் நெருங்கும் போது (கடைசி 3-5 ஆண்டுகள்), ரிஸ்க்கைக் குறைக்க Hybrid மற்றும் Debt Mutual Funds-க்கு பணத்தை மெதுவாக மாற்ற வேண்டும் (STP). இது போர்ட்ஃபோலியோவை பாதுகாக்கும். NRE / NRO கணக்கு தெளிவு: இந்தியாவில் முதலீடு செய்யும் போது Tax விதிமுறைகளைப் புரிந்து NRE/NRO கணக்குகளைச் சரியாகப் பயன்படுத்துங்கள். குழப்பமில்லாத வரி நிர்வாகம் பாதி கவலையைக் குறைக்கும். ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம்: இந்தியாவில் இறங்கிய பிறகு பாலிசி எடுப்பது கஷ்டம். NRI-ஆக இருக்கும் போதே குடும்பத்திற்கு ஒரு நல்ல Comprehensive Health Insurance எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். SWP எனும் மாத ஓய்வூதியம்: ரிட்டயர் ஆன பிறகு Systematic Withdrawal Plan (SWP) மூலம் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியம் போல எடுத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு ரூ. 125000 வரை வருமான வரிச் சலுகையும் உண்டு! ரியல் எஸ்டேட் லாக்-அப் வேண்டாம்: பயன்படாத இடங்களில் தேவையில்லாமல் லேண்ட் வாங்கிப் போடாதீர்கள். லிக்விடிட்டி (Liquidity) ரொம்ப முக்கியம். ஓய்வுக்காலத்தில் அவசரத்திற்கு வி்ற்க முடியாத சொத்துக்களால் பிரயோஜனமில்லை. இமேஜினரி லைஃப்ஸ்டைல் தவிர்த்தல்: வெளிநாட்டு வாழ்க்கை முறை வேறு, இந்தியா வந்த பிறகு இருக்கும் செலவுகள் வேறு. இரண்டுக்கும் இடைப்பட்ட யதார்த்தமான லைஃப்ஸ்டைலைத் திட்டமிடுங்கள். சொத்துக்கள் விவரம் மற்றும் 'Will': உங்கள் பெயரில் உள்ள அனைத்து முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்கள் மற்றும் சொத்துக்களின் விவரங்களை Nominee-க்குத் தெரியப்படுத்தி, ஒரு 'Will' எழுதி வைப்பது குடும்பத்திற்கு நல்லது. ஓய்வு முடிவல்ல, இனிதான தொடக்கம்: நிதி ரீதியாகத் தயார் ஆன பிறகு, ஓய்வுக்காலத்திற்குப் பின் என்ன செய்யப் போகிறோம் (Social work, Farming, Hobbies) என்ற தெளிவான மனநிலையை இப்போதே வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களின் திட்டத்தை கமெண்ட் பாக்ஸ்-ல் சொல்லலாமே! பணத்தை சரியான மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் திட்டங்களில் முதலீடு செய்து, ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கொண்டாடுங்கள்! NRI-களுக்கான A-Z ரிட்டைர்மென்ட் வழிகாட்டல் வேண்டுமா? நீங்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்ப இருக்கிறீர்களா? 45-வயதுக்கு மேல், ரிட்டைர்மென்ட் பிளானிங் தேவைப்படும் நபரா? வெளிநாட்டு லைஃப்ஸ்டைலை இந்தியாவிலும் பெற விருப்பமா? 'லாபம்' வழங்கும் 'Retirement Planning for Gulf NRIs: A to Z Blueprint + Monthly Income Plan' ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிம்மதியான ஓய்வுக்கால நிதி திட்டமிடல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். நாள்: ஆகஸ்ட் 1, 2026 சனி யாருக்கு: வளைகுடா (Gulf) வாழ் NRI-களுக்கானது நேரம்: இந்திய நேரம் பகல் 12:30 மணி நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/personal-finance/10-laws-for-a-happy-nri-retirement-plan




