``1976 இல் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அந்த எண்ணிக்கை 25 ஆண்டுகளுக்கு தொடரும் என கூறப்பட்டது. அந்த வகையில் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் தொகுதி மறுவரையறையை கொண்டு வருகிறார்கள். ஆனால் மத்திய அரசின் பேச்சை கேட்டு தென் மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டை தீவிரமாக பின்பற்றின. வாக்குவங்கியை மனதில் வைத்தே பாஜக தொகுதி மறுவரையறையை கையில் எடுக்கிறது." - அமைச்சர் ராஜேஸ் குமார் தீர்மானத்தில் ஒரு திருத்தம் தேவை! - தமீமுன் அன்சாரி ``மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கிய தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையிலும், அவர்கள் வெல்லவே முடியாத தென் மாநில எம்.பிக்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்கள் வெல்லும் வட மாநில எம்.பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தப் பார்க்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அப்படியே இருக்கிறது. " அமைச்சர் ஷாஜகான் தமீமுன் அன்சாரி தமீமுன் அன்சாரி, ``தீர்மானத்தில் ஒரு திருத்தம் தேவை. முலாயம் சிங் யாதவ் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை குறித்து நாடாளுமன்றத்தில் போராடினார். ஆனால், அது பெண்களுக்கு எதிரான போராட்டமாக திருப்பப்பட்டது. அவர் கேட்டதை நானும் இங்கே கேட்கிறேன். மகளிரி இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்." என்றார், `முதல்வர் அறிவித்த தனித்துவமான மகத்துவமான தீர்மானத்தை விசிக வரவேற்கிறது.' - அமைச்சர் வன்னி அரசு விசிக சார்பாக பேசிய அமைச்சர் வன்னிஅரசு, ``முதல்வர் அறிவித்த தனித்துவமான மகத்துவமான தீர்மானத்தை விசிக வரவேற்கிறது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என அண்ணா சொன்னார். வடக்கில் இருப்பவர்கள் மட்டும்தான் மனிதர்களா? தெற்கில் இருப்பவர்கள் மூன்றாம் தர மக்களா? என பெரியார் கேட்டார். அண்ணல் அம்பேத்கர், 'வடக்கை விட தெற்கில் வாழும் மக்கள் முற்போக்கானவர்கள், நாகரீகமானவர்கள்' எனப் பேசியிருக்கிறார். பாஜகவின் திட்டங்கள் வெளியில் சாதாரணமாகத்தான் தெரியும். உற்றுநோக்கினால்தான் அதிலுள்ள சதி புரியும். அமித் ஷாவும் மோடியும் நாடாளுமன்றத்தில் பேசுவது வேறு வெளியில் பேசுவது வேறு. அவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்துவதற்குதான் இந்த தீர்மானம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறையை பாஜக கொண்டு வர நினைத்த போது இந்தியா கூட்டணி கட்சிகள் அதை எதிர்த்து தோற்கடித்தன. தொகுதி மறுவரையறால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தே அதிக எம்.பிக்கள் செல்வார்கள். பெரிய மாநிலங்களை சேர்ந்தவர்களே பிரதமர் ஆவார்கள். அது மாநிலங்களுக்கிடையே சமநிலையற்ற தன்மையை உண்டாக்கும் என முன்பே எங்களின் தலைவர் திருமா எச்சரித்தார். தொகுதி மறுவரையறையால் வடக்கின் ஆளுகைக்குள் தெற்கு சுருக்கப்படும். " என்றார். அவசரக்கதியில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். - எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழ்நாட்டுக்கு தற்போது 39 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் 7.18% விகிதாச்சாரம் குறையக்கூடாது என்றுதான் எங்களின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தோம். தமிழகத்தினுடைய விகிதாச்சாரம் பாதிக்கப்படாது என உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் உறுதி கொடுத்திருக்கிறார். தமிழகத்தின் இப்போதைய எம்.பி எண்ணிக்கை குறையாமல் 50% இடங்கள் அதிகரிக்கப்படுவதை ஆதரிக்கிறோம். அதிமுக ஆட்சியில் இருந்த போது 6 மாவட்டங்களை நிர்வாக காரணங்களுக்காக பிரித்தோம். புதுச்சேரியில் 10 லட்சம் மக்கள்தான் இருக்கிறார்கள். அங்கே ஒரு முதல்வரே இருக்கிறார். புதுச்சேரியை விட அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாளுமன்ற தொகுதிகள் தமிழகத்தில் இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் மக்கள் தொகை மட்டும் 20 லட்சம். எடப்பாடி பழனிசாமி 1998 லேயே நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக அதிமுக போராடியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடத்தை பெண்களுக்கு கொடுத்ததும் அதிமுக ஆட்சியில்தான். தொகுதிமறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான அறிகுறியே இல்லை. மசோதாவில் தமிழகத்துக்கு என்ன இருக்கிறது என்பதை அறியாமலேயே அவசரக்கதியில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். அதேநேரத்தில் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு கோரும் தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறோம்." என்றார். ``இந்தியாவுக்கு இன்னும் அதிக நாடாளுமன்ற இடங்கள் தேவைதான்." பாமக எம்.எல்.ஏ, கணேஷ் குமார், ``இன்னும் நிறைய மாவட்டங்களை நிர்வாகக் காரணங்களுக்காக பிரிக்க வேண்டும் எனும் கோரிக்கை இருக்கிறது. உள்ளாட்சியில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது. கட்சிகளில் கூட முன்பெல்லாம் வருவாய் மாவட்டத்துக்கு ஒரு மாவட்டச் செயலாளர்தான் இருப்பார். ஆனால், இப்போது பாருங்கள் தவெகவில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் இருக்கிறார். ஆக, 97 கோடி வாக்காளர்கள் இருக்கும் இந்தியாவுக்கு இன்னும் அதிக நாடாளுமன்ற இடங்கள் தேவைதான். இப்போதைய நாடாளுமன்ற விகிதத்தின் படி 7.18% இடங்கள் தமிழகத்தில் இருக்கிறது. அந்த 7.18% விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தொகுதிமறுவரையறை இருக்க வேண்டுமென கடந்த ஆண்டு கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியுமே ஏற்று உறுதியளித்திருக்கின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநிலங்களுக்கும் 50% எண்ணிக்கை உயர்வை கொடுப்பதாக கூறுகிறார். அந்த 50% பேரும் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் சட்டத்தை கொண்டு வருகிறார்கள். அப்படி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகத்திலிருந்து 20 பெண் எம்.பிக்கள் செல்வார்கள். செவி வழியாக வந்த தகவலை வைத்துக் கொண்டு தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது எப்படி சரியாக இருக்கும்? அதனால் முதல்வர் இந்தத் தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும். தீர்மானத்தில் 'ஒரு மனதாக நிறைவேற்றம்' எனும் வார்த்தையை நீக்க வேண்டும்" என்றார். `மாற்றம் நல்லதுதான். மாற்றம் வந்ததால்தான் நீங்களெல்லாம் அமைச்சராக வந்தீர்கள்' - பாஜக எம்.எல்.ஏ ``இந்த அவசரம் ஏன் என்று புரியவில்லை. தொகுதி மறுவரையறை பரிசீலனையில்தான் இருக்கிறது. மாற்றம் நல்லதுதான். மாற்றம் வந்ததால்தான் நீங்களெல்லாம் அமைச்சராக வந்தீர்கள். நாடாளுமன்றத்தில் அதிக இருக்கைகள் வைத்து கட்டியதையெல்லாம் விமர்சனமாக முன்வைக்கிறார்கள். அதிலெல்லாம் எந்த உள்நோக்கமும் இல்லை. வருங்கால சந்ததியை மனதில் வைத்து கட்டப்பட்டது அது. என்னுடைய நீலகிரி நாடாளுமன்ற தொகுதி நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியது. ஒரு எம்.பி நான்கு மாவட்ட மக்களின் குறைகளை கேட்டு பணிகளை செய்வது கடினம். அதேநேரத்தில் தமிழகத்துக்கு ஒரு இழப்பு ஏற்படுவதை ஏற்க முடியாது. அதை மத்திய அரசிடம் எடுத்துக் கூறலாம். அதை விடுத்து அவசரமாக நிறைவேற்றப்படும் இந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது. " - பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் `தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் கூட்டம் நடத்தப்பட்டது' - முதல்வர் விஜய் முதல்வர் விஜய், ``சமீபத்தில் தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. 6 கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். கடைசியாக 1971 இல் மக்கள் தொகை கணக்குப்படி தொகுதி மறுவரையறை நடந்தது. இப்போது முதலில் 2011 கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை கொண்டு வர நினைத்தனர். அந்த மசோதா தோல்வியடைந்தது. மக்களவை உறுப்பினர்களை 50% உயர்த்தும் திட்டத்தில் ஒன்றிய அரசு இருப்பதாக தெரிகிறது. அப்படி 50% இடங்களை முதலில் அதிகரித்தாலும், பின் 2026 சென்செக்ஸின் படி மீண்டும் இடங்களின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படும். அப்போது தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும். எனவே தற்போதுள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டுமென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்தோம்." என்றார், தமிழக முதல்வர் விஜய் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்ட்மானத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது! `மக்களவை தொகுதிகளில் எண்ணிக்கை 543 என்ற அளவில் நிரந்தமாக்கபட வேண்டும்' - முதல்வர் விஜய் முதல்வர் விஜய், ``மக்களவை தொகுதிகளில் எண்ணிக்கை 543 என்ற அளவில் நிரந்தமாக்கபட வேண்டும். அதில், மகளிருக்காக அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடை வரும் 2029 தேர்தலிலே கொண்டு வரவேண்டும். நம்ம வீட்டில் இருக்கிற அம்மா, அக்கா, தங்கைக்கான தீர்மானம் இது. நான் இந்த இடத்தில் நிற்க பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள்தான் காரணம். அந்த நன்றியோடு இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறேன். அறிவியல், நீதி, நிர்வாகம் என எல்லா துறைகளிலும் தமிழக பெண்கள் சாதித்து வருகிறார்கள். அந்த பெண்கள் அரசியலிலும் வெல்ல வேண்டும். மக்கள் தொகையில் பெண்கள்தான் அதிகம். வாக்காளராக பெண்கள்தான் அதிகம். ஆனால், அரசியலில் அவர்களுக்கான இடம் குறைவாக இருக்கிறது. 2021 இல் 12 பெண் எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்தனர். இப்போது 23 பெண் எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆனாலும் சதவீதமாக பெண்களின் பிரதிநிதித்துவம் பெரிதாக உயரவில்லை. தொகுதி மறுவரையறையோடு பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டோடு இணைத்து அதை தள்ளிப்போடக்கூடாது. தவெக அரசு பெண்களுக்கான அரசு. இங்கே 4 பெண் அமைச்சர்கள் இருக்கிறார்கள். சிங்கப்பெண் படை இருக்கிறது. பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீடு சலுகை அல்ல. அவர்களின் ஜனநாயக உரிமை இது. ஒரு பெண் அதிகாரம் பெறும் போது குடும்பம் உயருகிறது. ஆயிரம் பெண்கள் அதிகாரம் பெறும் போது நாடே உயரும். " என்றார், 1971க்கு பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு தான்! - விஜய் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றி வருகிறார். அவர், ``2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது என அவர் தனது உரையில் குறிப்பிட்டார். ``சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழகத்தின் மக்களவை எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த தொகுதி மறுவரையின் சாதக பாதகங்கள் குறித்து விரிவாக ஆலோசனைகள் நடத்தப்பட்டது. குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், தொகுதி மறு வரையறையால் என்ன மாதிரியான சிக்கல்கள் வரும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 1971க்கு பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு தான் என்பது தெளிவாக தெரிகிறது" என்றார். தனித் தீர்மானமும், திமுகவின் நிலைப்பாடும்! தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை, தொகுதி மறுவரையறைக்கு எதிராக இந்தியாவின் எந்த மாநிலத்தில் குரல் ஒலித்ததோ இல்லையோ, தமிழ்நாட்டில் எதிர்ப்புக் குரல் அதிகமாக இருந்தது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஐந்து மாநிலங்களின் முதலமைச்சர்களைச் சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்தினார். தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்துக்கூட எதிர்ப்புகளைப் பதிவு செய்தார். ஆனால், தமிழ்நாட்டின் ஆட்சியும், காட்சிகளும் மாறிய பின், தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுக சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது. இந்த மசோதாவை எதிர்த்து விஜய் கடந்த 8-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தினார். ஆனால், அதில் திமுகவும், அதிமுகவும் கலந்துகொள்ளவில்லை. விஜய், உதயநிதி ஸ்டாலின் திமுக - பாஜக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதனால் தான், திமுக இந்த விஷயத்தைப் பெரிதாக கையில் எடுக்கவில்லை என்கிற பேச்சும் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டாலும், திமுக ஒன்று வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்பு செய்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுகவிற்கு நெருக்கடி கொண்டு வரவே, இந்தத் தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து காய்களை நகர்த்துகிறது தவெக அரசு என்ற தகவல் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு பின் நடக்கும் வாக்கெடுப்பின் போது, தொகுதி மறுவரையறையில் திமுக என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது தெரிந்துவிடும். தமிழ்நாடு சட்டமன்றத்தின் இன்றைய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/live-updates-of-tamilnadu-assemly-and-delimitation-bill



