மதுரா, யோத்தியைப் போலவே மதுராவிலும் பிரம்மாண்ட கோவில் வளாகம் அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார். பின்னர் உரையாற்றிய அவர், “உலகின் மிகப் பெரிய கோவில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி மற்றும் காசியில் உள்ளதைப் போன்று மதுரா மற்றும் பிருந்தாவனிலும் பிரம்மாண்டமான வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் அருளிய பிரகடனம் இன்றும் பொருந்துகிறது. தீயவர்களை அழித்து நல்லவர்களை பாதுகாப்பேன் என்று அவர் பிரகடனம் செய்தார். நற்குணத்தின் சக்திகள் எங்கெல்லாம உள்ளனவோ அவை எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்கப்படும். இந்தியா மீது பல படையெடுப்புகள் நிகழ்ந்தன. பலர் தங்கள் மதங்களை இந்தியா மீது திணிக்க முயன்றனர். எனினும், யாராலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியவில்லை. பகவான் கிருஷ்ணரின் பாரம்பரியம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். மதுரா கோவிலை ஒட்டி ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக இந்து தரப்பினர் கூறி வருகின்றனர். மசூதி உள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என கூறி பலர் உரிமையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கிருஷ்ண பகவான் பிறந்த இடமான மதுரா ஜன்மாஷ்டமி பண்டிகையைக் கொண்டாடும். விதமாக வண்ணமயமான விளக்குகளால் ஒளிர்ந்தது; அங்குள்ள கோவில்களும் புனிதத் திலங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/grand-temple-in-mathura-yogi-adityanath




