கொல்கத்தா மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் ஆளில்லாத பெட்டியில் இளம் கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தின் அலிப்பூர்துவார் மாவட்டத்தின் கால்சினி நகரை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ஏறினார். ஆனால், பெட்டியில் பெரிய அளவில் யாருமில்லை. இருந்த ஒரு சிலரும் வழியில் இறங்கி விட்டனர். ஒரு கட்டத்தில் ஆட்கள் இன்றி பெட்டி காலியாக இருந்துள்ளது. இந்த சூழலை அசாம் மாநிலத்தின் ரங்கியா நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் பயன்படுத்தி கொண்டார். அவர், ரெயில் கால்சினி நகரருகே வந்தபோது, ஆளில்லாத சந்தர்ப்பத்தில் கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், பயந்துபோன அந்த பெண் கத்தி, கூச்சல் போட்டு உள்ளார். ரெயில்வே பணியாளர்கள் அவருடைய அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து பெட்டியில் இருந்த ரெயில்வே பணியாளர்கள், ரெயில்வே உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, ரெயில் அலிப்பூர்துவார் ரெயில் நிலையம் வரும் வரை போலீசார் காத்திருந்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் கணவரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறி அழுதுள்ளார். அவர் உடனே, பெண்ணை மீட்க ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். ரெயில் நின்றதும், அந்த பெண் மீட்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, அரசு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் வாலிபரை கைது செய்தனர். அவர் கவுதம் மகதோ என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/sexual-assault-pregnant-woman-running-train-west-bengal




