தாவணகரே கர்நாடகாவில் 200 தாலுகாக்களை வறட்சி பாதித்தவையாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று துணை முதல்-மந்திரி கூறியுள்ளார். கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் பருவநிலை மாற்றத்தினால், பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு பொய்த்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் போதிய நீரின்றி வறட்சியான நிலை காணப்படுகிறது. இந்த சூழலில், மாநில துணை முதல்-மந்திரி பரமேஷ்வரா இன்று கூறும்போது, இதுவரை முதல் கட்டத்தில் 101 தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 24 தாலுகாக்களும் அதில் சேர்க்கப்பட்டன. அடுத்த 3 முதல் 4 நாட்களில் 52 தாலுகாக்கள் அதில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறட்சி பட்டியல் அதற்கடுத்த கட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் பற்றி ஆய்வு செய்யப்படும் என கூறினார். இதுவரை கிடைத்த தகவலின்படி, 200-க்கும் மேற்பட்ட தாலுகாக்களை வறட்சி பாதித்த பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளது என கூறினார். இதில், வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்ட 101 தாலுகாக்களில் ரூ.18 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்காக நிவாரண தொகையாக மத்திய அரசிடம் இருந்து ரூ.3,500 கோடி நிதியுதவி கேட்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/decision-to-declare-200-taluks-drought-hit-in-karnataka-deputy-cm




