மழையால் வரத்து குறைவு தங்கம் விலை ஏறினால் நடுத்தர வர்க்கம் அதை வாங்குவதை குறைத் துக்கொள்ளும். ஆனால் வெங்காயம் விலை ஏறினால் ஒட்டுமொத்த சமையலறையுமே ஸ்தம்பித்துவிடும். அப்படியான பெரிய வெங்காயம் மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகு திகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் மழையால் அங்கு வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து சற்று குறைய தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 60 முதல் 65 லாரிகளில் மராட்டிய மாநிலம் நாசிக், புனே, சோலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் இருந்து வரும் சூழலில், தற்போது 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வெங்காயம் விலை உயர்வு இந்த வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் விலை, தற்போது கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்து ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 என்ற நிலைக்கு விற்கப்படுகிறது என கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முத்துக்கு மார் தெரிவித்தார். இது வெளிமார்க்கெட்டில் இதைவிட சற்று அதிகமா கவே விற்கப்பட்டு வருகிறது.இனி வரும் நாட்களிலும் விலை எகிறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும், ஒரு கிலோ கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.50 முதல் ரூ.60 வரை கூட தொட வாய்ப்புள்ளது என்றும், இது எப்போதும் தென் மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய நிகழ்வுதான் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலையைவிட மேலும் அதிகரிக்குமா? என்பது வரத்தை பொறுத்தே இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தக்காளியை பொறுத்தவரையில், வரத்து அதிகரித்து காணப்படுவதால், ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், நவீன் தக் காளி ரூ.30 முதல் ரூ.50 வரையிலும் விற்கப்படுகிறது. இதுதவிர பிற காய் கறி விலையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து நீடிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/sudden-rise-in-large-onion-prices-likely-to-increase-further-housewives-shocked




