லண்டன், லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடரில் இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அனாஹத் சிங் அபாரம் லண்டனில் நடைபெற்று வரும் லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடரில் பெண்கள் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள அனாஹத் சிங், நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் நெலே கிலீஸை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய அனாஹத் சிங், கிலீஸை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். சிவசங்கரி சுப்ரமணியம் தற்போதைய உலக ஜூனியர் சாம்பியனான அனாஹத் சிங், கடந்த ஆண்டு லண்டன் கிளாசிக் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நெலே கிலீஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிப் போட்டியில் 2024-ம் ஆண்டு லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் சாம்பியனான சிவசங்கரி சுப்ரமணியத்தை எதிர்கொள்கிறார். சிவசங்கரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே தொடரில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஹனியா எல் ஹம்மாமி, 8 முறை உலக சாம்பியனான நூர் எல் ஷெர்பினி மற்றும் பெல்ஜியத்தின் நெலே கிலீஸ் ஆகியோரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பு காலிறுதிப் போட்டியில் இரண்டு முன்னணி வீராங்கனைகளான அனாஹத் சிங் மற்றும் சிவசங்கரி சுப்ரமணியம் மோத உள்ளதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/london-squash-classic-anahat-singh-to-face-sivasangari-subramaniam-in-quarter-finals




