நியூயார்க் கப்பல்களையும், ஊழியர்களையும் தாக்குவது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஐ.நா.வில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 81-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர், துருக்கி, ஈரான் மற்றும் ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு விவகாரங்கள், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளுடனான ஒத்துழைப்பு மற்றும் வளைகுடா பகுதிகளில் காணப்படும் மோதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கடல்சார் சவால்கள் இந்த பயணத்தில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார். இந்த நிலையில், ஐ.நா.வில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று பேசும்போது, நிலத்தில் நீடித்து காணப்படும் சவால்களுடன் கூட கடல்சார் பகுதியிலும் புதிய சவால்கள் சேர்ந்துள்ளன என்றார். வளைகுடா, செங்கடல் மற்றும் கருங்கடல் உள்பட பல்வேறு பகுதிகளில் வர்த்தக கப்பல்கள் மீதும், கப்பல் பணியாளர்கள் மீதும் நடந்து வரும் தாக்குதல்கள் பற்றி அவர் கவலை வெளியிட்டார். இதுபோன்ற தாக்குதல்களால் இந்திய பணியாளர்கள் மற்றும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல் பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். சமரசம் கிடையாது இதுபோன்ற தாக்குதல்களுக்கு எதிராக உலகளாவிய பொது கருத்துகளை கட்டமைக்கும் நோக்கில் லைபீரியா மற்றும் 23 வேறு நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது என்றார். கப்பல் மற்றும் கப்பல் பணியாளர்கள் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் கிடையாது என்று நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த உயரிய முயற்சியில், சர்வதேச சட்டங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/attacks-on-ships-and-workers-completely-unacceptable-jaishankar-at-un




