திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. முருங்கைக்காய் விலை வீழ்ச்சி, விவசாயிகள் கவலை திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது முருங்கைக்காய் விலை கிலோ ரூ.8 முதல் ரூ.12 வரை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பறிப்பு கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குளிர்பதன கிடங்கு அமைக்க கோரிக்கை திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் முருங்கைக்காய் போன்ற காய்கறிகளை சேமித்து வைக்க அப்பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். மேலும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஆலை தொடங்குவதோடு, ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் முருங்கைக்காய் கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-yield-drought-in-drumstick-prices-farmers-concerned




