ஸ்ரீகாந்த் ஒடெல்லா இயக்கத்தில் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தசரா’. ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. ‘தசரா’ படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நானி நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் 3 திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்ததால் அவரது படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன. அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் ஒடேசா இயக்கத்தில் தசரா திரைப்படத்தில் நானி -கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆயா சேர்’ பாடல் யூடியூபில் 20 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அனிருத் இசையமைத்த இப்பாடலை அதுல்லா ஜாங்கிரெட்டி, அர்ஜுன் சாண்டி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/nanis-the-paradise-film-teaser-release-date-announcement




