ஈரோடு, ஈரோடு மாவட்டம் பவானி அருகே குப்பிச்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் யோகேஷ் (வயது 11) என்ற மாணவன் 6ம் வகுப்பு படித்து வந்தான். மின்சாரம் தாக்கி மாணவன் பலி இந்நிலையில், மாணவன் யோகேஷ் இன்று மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் நடந்து சென்றுள்ளான். அப்போது, வளாகத்தின் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மாணவன் யோகேஷ் மிதித்துள்ளான். இதில் மின்சாரம் பாய்ந்த மாணவன் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தான். உடனடியாக மாணவனை மீட்ட பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் யோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உறவினர்கள் போராட்டம் இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-school-campus-electrocution-student-death-shocking-incident




