காத்மாண்டு, திபெத் பகுதியில் மீண்டும் ஓர் அணை உடைந்ததால் நேபாளத்தில் புதிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத இயற்கை பேரழிவு திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் கடந்த புதன்கிழமை புகுந்து பேரழிவை விளைவித்தது. திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னர் திரிசூலி, நாராயணி ஆறுகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. பலத்த உயிர்ச் சேதம் மற்றும் பொருட்சேதத்துடன், நேபாளம் வரலாறு காணாத மிக இயற்கை பேரழிவை சந்தித்தது. வெள்ளத்தால் புரட்டிபோடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினர் மூன்றாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். நீர்த்தேக்க அணை உடைந்தது இதுவரை 500 சடலங்களை மீட்புப் படையினர் மீட்டுள்ள நிலையில், காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், திபெத் பகுதியிலிருக்கும் நீர்த்தேக்க அணை உடைந்துள்ளதாக நேபாள காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோஷி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு நேபாள காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மீட்பு பணிகள் நிறுத்தம் மீட்பு பணியாளர்களும், பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருவெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை நிறுத்தியது சீனா, நேபாளம், நேபாளம் மற்றும் திபெத் பகுதியில் சேர்த்து பலி எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. 1,500-க்கும் மேற்பட்டோர் இன்னும் மீட்கப்படாமல் தேடப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆபத்தான மண்டலங்களில் இருந்து 3,253 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRRMA) தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/reservoir-dam-breaks-in-tibet-nepal-police-warns




