தூத்துக்குடி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- சிலர் நமது தலைவர்களை பற்றி கேவலமாக பேசுவது; திமுகவில் உள்ளவர்களை கைது செய்வது என மிரட்டி பார்க்கிறார்கள். திமுகவை தொட்டு பார்க்க முடியுமா? விஜய் எந்த வகையில் முதல்-அமைச்சராக வந்தார்? அவர் எம்ஜிஆரை குறிப்பிடுகிறார். எம்ஜிஆரும் அவரும் ஒன்றா? சினிமா நடிக்கும் போது விஜய் என்பது அரசியலுக்கு வந்ததும் ஜோசப் விஜய் என்பது. திருச்சி தேவாலயத்திலே முட்டி போட்டு நடப்பது. எம்.ஜி.ஆ.ரை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. அதேபோல, தற்போது விஜய்யா ஆட்சி நடத்துகிறார்? லாட்டரி வியாபாரி ஆதவ் அர்ஜுனா தான் ஆட்சியை நடத்துகிறார். எவ்வளவு நாட்கள் இந்த ஆட்சி நடைபெறும் என்று நான் குறிப்பிட்டு சொல்கிறேன். 6 மாத காலத்திற்கு இந்த ஆட்சி போகவில்லை என்று சொன்னால் பார்ப்போம். 6 மாதத்தில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருவார். திருச்சி சிவா போன்றவர்கள் எல்லாம் மத்தியில அமைச்சராக அமர்வார்கள். அந்த காலம் வரும்போது, சினிமாவில் நடிக்கும் போது முதல்-அமைச்சர் விஜய் என்னென்ன தப்பு செய்தார்? என்பது எல்லாம் வெளியே வரும். என்னை ஜெயிலில் பிடித்து போட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தமா. அந்த அம்மாவும் தான் என்னை பிடித்து போட்டார் 37 நாட்கள் திருச்சி சிறையில் அடைத்தார். இப்போது, இவரும் என்னை பிடித்து போட்டு மிரட்டலாம் என்று நினைத்தார் அது நடக்குமா? காவல்நிலையத்தில், "நீங்க எம்.எல்.ஏ. பதவிய ராஜினாமா செய்யுங்கள் உங்களை மந்திரி ஆக்குவோம் என கூறினார்கள், அதற்கு நான் மந்திரியாவது கிந்திரி ஆவது என கூறிவிட்டு என்று நான் சம்மதிக்கவில்லை. யார் என்ன செய்தாலும் எங்கள் கழகத்தை அசைத்துக் கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-will-be-the-chief-minister-in-6-months-anita-radhakrishnan-soolurai




