நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு திரும்பியுள்ளார் நடிகர் ஜீவன். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து கவனம் பெற்றவர் நடிகர் ஜீவன். ‘காக்க காக்க’ திரைப்படத்தில் பாண்டியா என்கிற வில்லனாக நடித்து அசத்தியவர் தொடர்ந்து ‘திருட்டு பயலே’ திரைப்படத்தில் நாயகனாக நடித்து வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு ‘நான் அவனில்லை, யுனிவர்சிட்டி, திருட்டுபயலே மச்சக்காரன், அதிபர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக ‘பாம்பாட்டம்’ என்ற படத்தில் நடித்தார். ஜீவன் நடித்த திரைப்படங்கள் கவனிக்கப்படாததால் சினிமாவிலிருந்து விலகி அமெரிக்கா சென்றார். தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் ஜீவன் மீண்டும் நடிகராக ‘லவ்வர் பாய்’ என்கிற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் அர்ஜித் சங்கர், கிரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அசோக் குமார் இயக்கும் இந்த படத்தில் ஜீவன் மீண்டும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. The OG is back in Lover Boy! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-jeevan-is-making-his-acting-re-entry




