செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான இந்திரா பவனில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்கினார். கூட்டத்தில், முன்னாள் கட்சி தலைவர்களான சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் பொது செயலாளர்களான பிரியங்கா, ஜெயராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்களான முகுல் வாஸ்னிக் மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), வி.டி.சதீசன் (கேரளம்), சுக்விந்தர் சிங்சுகு (இமாசல பிரதேசம்), டி.கே.சிவக்குமார் (கர்நாடகா) ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கார்கே பேசியதாவது:- 94 ஆயிரம் பள்ளிகள் மூடல் கடந்த 12 ஆண்டுகளில், மோடி அரசு இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்து விட்டது. புதிய பள்ளிகள் திறக்கப்படுவதற்கு பதிலாக, சமீபத்திய ஆண்டுகளில் 94 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார்மயமாக்கலுக்கான போட்டியால், உயர்கல்வி மேலும் மேலும் விலை உயர்ந்ததாகவும், சாதாரண குடும்பங்களுக்கு எட்டாததாகவும் மாறி வருகிறது.தங்கள் கல்வியை முடித்த பிறகும், இளைஞர்கள் வேலை தேடி செல்லும் போது, வினாத்தாள் கசிவுகள், ஆட்சேர்ப்பு தேர்வு மோசடிகள் மற்றும் நியமனங்களில் தாமதங்கள் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். அயோத்தி கோவில் நன்கொடை இந்தியா முழுவதும் இளைஞர்களிடையே எழுந்துள்ள கோபம் திடீரென ஏற்பட்டதோ அல்லது ஒரே நாளில் நிகழ்ந்ததோ அல்ல. இந்த அரசுக்கு அவர்கள் சொல்வதை கேட்க ஒருபோதும் நேரம் இருந்ததில்லை. மாறாக, பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக தொடர்ந்து தற்காலிக நடவடிக்கைகளையே நாடியுள்ளது. அதன் விளைவாக, அவர்கள் வீதிகளில் இறங்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களின் கவலைகளை காங்கிரஸ் தனது செயல்திட்டத்தில் இணைத்துள்ளது. ராகுல்காந்தி, அவர்களின் குரல்களை தேசிய மேடைக்கு கொண்டு வந்துள்ளார். பொதுமக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய மற்றொரு முக்கிய பிரச்சினை அயோத்தி ராமர் கோவில் தொடர்பானது. இங்கு நடந்த மாபெரும் ஊழல் பிரச்சினை மக்களிடையே எதிரொலித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/modi-government-has-destroyed-students-future-mallikarjun-kharge-lashes-out




