சென்னை, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் முடிவடைந்து, அதிகாரப்பூர்வமாக விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். அலைமோதிய கூட்டம் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் நிறைவடைந்தன. காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, தேர்வு அழுத்தங்களில் இருந்து விடுபடவும், விடுமுறை நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்கவும் பொழுதுபோக்கு மையங்களை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றான வண்டலூர் பூங்காவிற்கு சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். விலங்குகளை கண்டு குதூகலம் பூங்காவிற்குள் நுழைந்த குட்டீஸ்கள் அங்குள்ள சிங்கம், புலி, கரடி, யானை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளையும், அரிய வகை பறவைகளையும் நேரில் கண்டு களித்து குதூகலமடைந்தனர். குறிப்பாக, பேட்டரி கார்கள் மற்றும் சவாரி வாகனங்களில் ஏறி பூங்காவை சுற்றி வர நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். மக்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வண்டலூர் பூங்கா வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கூடுதல் வசதிகள் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பூங்கா நிர்வாகம் சார்பாகப் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/quarterly-holidays-school-vandalur-zoo-crowd




