புதுச்சேரி, ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மாதாந்திர மானிய உதவி நிறுத்தப்படும் என்று புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது. மாதாந்திர உணவு தானிய மானியம் இதுதொடர்பாக புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மாதாந்திர உணவு தானிய மானியம் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் வாலட்டுகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறை 26.2.26-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக நியாயவிலைக் கடைகளின் வாயிலாக 1.6 லட்சம் பயனாளிகள் தங்கள் கைப்பேசி எண்களை பதிவு செய்து இணைத்துக் கொண்டுள்ளனா். இதில் 1.02 லட்சம் அட்டைதாரா்களுக்கு ஜூன் 2026-க்கான உணவு தானிய மானியம் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறையில் வரவு வைக்கப்பட்டு அவா்களுக்கு டிஜிட்டல் வாலட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை தங்கள் கைப்பேசி எண்களை இணைக்காத அட்டைதாரா்கள் வரும் 21.8.26-க்குள் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உணவு தானிய மானியம் நிறுத்தி வைக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் வங்கி கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/puducherry-monthly-financial-assistance-to-be-stopped-if-aadhaar-is-not-linked-with-the-ration-card




