சென்னை, மாநில உரிமைகள் பற்றிப் பேசும் காங்கிரஸ் கட்சிக்கும், மாணிக்கம் தாகூருக்கும் மக்கள் நலனைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலடியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:- என்ன சார் இது நியாயமா? ‘அவதூறு’ன்னு அறிக்கை விட்டுட்டு இவ்வளவு பெரிய உண்மைகளை மறைக்கப் பார்க்கிறீங்களே நயினார் நாகேந்திரன்? பழைய பல்லவியையே இன்னும் எத்தனை நாளைக்கு பாடுவீர்கள்? நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட பழைய புகார்களைப் பேசும் உங்களுக்கு, தற்போதைய CAG அறிக்கைகள் அம்பலப்படுத்திய துவாரகா எக்ஸ்பிரஸ்வே, ஆயுஷ்மான் பாரத் முறைகேடுகள் பற்றிப் பேச ஏன் நா எழவில்லை? தமிழக மக்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூ.1 வரிக்கும் வெறும் 29 பைசாவை மட்டும் திருப்பித் தரும் நிதி அநீதிக்கு என்ன பதில் இருக்கிறது? கிராமப்புற ஏழைகளின் 100 நாள் வேலைத் திட்டத்தை (MGNREGA) முடக்கிவிட்டு, அதற்குப் பதிலாக கொண்டு வந்துள்ள 'VBGRAM' திட்டத்தில் மத்திய-மாநில நிதிப் பகிர்வை 90:10 என்ற விகிதத்திலிருந்து 60:40 ஆக மாற்றி, தமிழகத்தின் மீது கூடுதலாக ரூ.5,000 கோடி நிதிச் சுமையைச் சுமத்துவது தான் நீங்கள் கூறும் 'அனைவருக்குமான வளர்ச்சியா'? பக்தி என்ற போர்வையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் அரங்கேறிய நில முறைகேடுகளும், லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கை திருட்டும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? இது ஊழல் இல்லையா? மாநில உரிமைக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் தார்மீகத் தகுதியோடு தொடர்ந்து குரல் கொடுக்கும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/how-long-will-you-continue-to-sing-the-same-old-refrain-manickam-tagores-reply-to-nayinar-nagendran



