நிரஞ்சனின் “மிஸ்டர் பாரத்” படத்தின் “மல்லிகை மொட்டு” வீடியோ பாடல் வெளியானது. ‘பைட் கிளப்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பென்ஸ்' படத்தை தயாரித்து வருகிறார். அதனை தொடர்ந்து, ‘மிஸ்டர் பாரத்’ என்ற புதிய படத்தையும் லோகேஷ் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார்.இயக்குனர் நிரஞ்சன் இயக்கி வரும் இந்த படத்தில் ‘கட்சி சேர’ புகழ் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. படப்பிடிப்பு நிறைவு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரியில் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். டப்பிங் பணிகள் நிறைவு ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்தது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார் இந்நிலையில், ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ‘மல்லிகை மொட்டு’ வீடியோ பாடல் வெளியானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/niranjans-mr-bhaarath-film-malligai-mottu-video-song-out



