புதுடெல்லி, பணமோசடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மேல்முறையீடு இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஏ.ஜி.மசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால், இதில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தது. மேலும், சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு எதிர்கால வழக்குகளுக்கு ஒரு முன்உதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/supreme-court-refuses-to-cancel-jaffer-sadiqs-bail-in-money-laundering-case




