மும்பை மராட்டியத்தில் பெண் மருத்துவர், ஊழியர் மீது கொடூர தாக்குதல் நடத்திய வீடியோ வைரலான நிலையில், சிவசேனா பிரமுகர் கைது செய்யப்பட்டார். மராட்டியத்தில் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வருபவர் மருத்துவர் சிருஷ்டி பவிஸ்கார். இவருடன் மருத்துவமனை பணியாளர் வைபவ் சலுங்கே என்பவரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு அந்த மருத்துவமனையில் புதிதாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இடவசதி இல்லை ஆனால் அந்த மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லை. இதனால், மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அதன் உறவினர்களிடம் பெண் மருத்துவர் சிருஷ்டி கூறியுள்ளார். ஆனால், அவர்களோ ஆத்திரமடைந்து நாங்கள் தாதாவை கூப்பிடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். சிறிது நேரத்தில் சிவசேனா (ஷிண்டே அணி) மாநகராட்சி உறுப்பினரான ரமேஷ் மாத்ரே என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். வீடியோ வைரல் அப்போது பெண் டாக்டர் சிருஷ்டி, மறுபக்கம் திரும்பி மொபைல் போனில் யாருடனோ பேசியபடி இருந்துள்ளார். இதனால், மாத்ரே வந்தபோது அவரை கவனிக்கவில்லை. அப்போது ஆத்திரத்தில் இருந்த மாத்ரே, பின்னால் இருந்து பெண் மருத்துவரை தாக்கினார். இதனால், அவர் கையில் இருந்த போன் கீழே விழுந்தது. அதிர்ச்சியில் அவர் திரும்பினார். இதன்பின்னர் அவரும், அவருடைய ஆதரவாளர்களும் மருத்துவ பணியாளரான சலுங்கேவை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டனர் என கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்த சூழலில், மாத்ரேவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/brutal-attack-on-female-doctor-and-staff-member-viral-video-shiv-sena-functionary-arrested




